ஆழி பேரலையீன் அழியாத சுவடுகள்



நீலக் கடலோரம் நிம்மதியாக வாழ்கிறீர்கள் என நினைத்தோம்
சுனாமியின் சுழல் உங்கள் வாழ்க்கையை சுழற்றிவிட்டது

மீன் பிடிக்க சென்றீர்கள் என்று இருந்தோம்
இப்படி
மீளாமல் மாய்ந்து விடுவீர்கள் என்று எண்ண வில்லை

நில அதிர்வுகளை மதிப்பிட ரிக்டர் அளவுகோல்
என்னும் கருவியை விஞ்ஞானம்கண்டுபிடித்தது,
எங்கள் மன அதிர்வுகளை மதிப்பிட மெய்ஞானத்தாலும் முடியவில்லை

உருக்குலைந்தது உங்கள் உடல்கள் மட்டுமல்ல
எங்களது உள்ளமுமே

உற்றார் உறவினர்களை இழந்து விட்டீர்கள்
உடமைகளை இழந்து விட்டீர்கள்
ஆனால் ஒன்று மட்டும் கலங்காமல் நிமிர்ந்து நிற்கின்றது
ஆம்

அது தான் கலங்கரை விளக்கம்!!!

இல்லை இல்லை !!!
அது தான் உங்கள் மன உறுதி அதில் தான் காண்கிறோம்
எங்கள் மனித நேயம் !

பயணங்கள் முடிவதில்லை


ஜனனம்!
மரணம்
இவை இரண்டிற்குள் நடப்பது வாழ்க்கை பயணம்

கருவாகி
உருவாகி
ஜனிப்பது பயணத்தின் தொடக்கம்
பின்னர்
தவழ்வது ஓர் பயணம்

தவழ்ந்த பிறகு

நடை பயில்வது ஓர் பயணம்
வளர்ந்து வாலிபனாக
வண்ண கனவுகளோடு வலம் வருவது ஓர் பயணம்

வாழ்க்கை துணைவியை கையில் பிடித்து கொண்டு
வலம் வருவது ஓர் பயணம்
மறுபடியும் ஜனனம்
அந்த ஜனனத்தின் மூலம் தொடரும் பந்தங்கள்

தொடர்ந்த பந்தங்கள் தான்
பின்னாளில் இறுதி பயணத்தில்
தொடரும் தீப்பந்தமாகின்றன

ஆம் பயணங்கள் முடிவதில்லை
வாழ்க்கை பயணங்கள் முடிவதில்லை

தேடல்




தொலைந்த இடத்தில் தேடிக்கொண்டு இருக்கிறேன்
என்று நினைத்தேன்
பிறகு தான் புரிந்தது
தொலைந்த இடத்தையே தேடிக்கொண்டு இருக்கிறேன்.

தொலைந்தது எதுவென்றே புரியாமல்
தேடி கொண்டு இருக்கிறேன் என்று
பிறகு தான் புரிந்தது

தேடலின் எல்லையை தொட்டுவிட்டேன் என்று நினைத்தேன்
எல்லையே இல்லையென்பது பிறகு தான் புரிந்தது
இதுதான் தேடலின் தொல்லை